search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ பள்ளி மாணவர்கள்"

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பள்ளி மாணவர்களை திறந்த வெளியில் அமர வைத்து ஆசிரியைகள் பாடம் நடத்துகின்றனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயற்சி மையம் உள்ளது. இங்கு கண்டோன்மென்ட் வாரியம் சார்பில் ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக இங்கு திறந்த வெளியில் கடும் குளிரில் குழந்தைகளை அமர வைத்து ஆசிரியைகள் பாடம் நடத்துகிறார்கள். இது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்துஅவர்கள் கூறும்போது, இடப்பற்றாக்குறையால் குழந்தைகள் மைதானம் மற்றும் ஸ்டேடியத்திலும் அமர்ந்து பாடம் கற்க வேண்டிய அவல நிலை உள்ளது. மழை, கடுங்குளிரால் குழந்தைகள் அவதியடைகின்றனர். இதற்கு உடனே தீர்வு காணவேண்டும் என்றனர்.


    இது குறித்து குன்னூர் மாவட்ட கல்வி அதிகாரி அமுதவல்லி கூறும்போது, இரு வகுப்புகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு திறந்த வெளியில் பாடம் நடத்தப்படுகிறது. இதனால் சிறுவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து தீர்வுகாண கண்டோன்மென்ட் அதிகாரிக்கு கல்வி அலுவலகம் சார்பில் உடனே கடிதம் அனுப்பப்படும் என்று கூறினார். #Tamilnews

    ×